பிசாசின் வேலைப்பட்டடையில் செய்யப்பட்ட குறும்படங்கள் 2

குப்பை

இது சிங்கப்பூரில் உருவான குறும்படம். சிறுவயதிலேயே தாய் ஆக்கப்படுதல் தொடர்பானது.




கானல்

இது பிரான்சில் உருவான குறும்படம். அகரம் கலையகத்தின் தயாரிப்பு.ஈழத்தில் இருந்து சென்று தங்கள் குடும்பத்தை முன்னேற்ற தங்களை தொலைக்கும் இளசுகளின் கதை. நல்ல படத்தொகுப்பு.





பிசாசின் வேலைப் பட்டடையில் செய்த குறும்படங்கள்

எனது வலைப்பதிவிற்கு பிசாசு என்று ஒரு சொல் வர தலைப்பு வைச்சது பிழையாய் போச்சுதோ என்று யோசிக்கின்றனான். ஏனென்றால் உருப்படியாய் ஒரு வேலையும் செய்யக் கிடைப்பதில்லை தவிர உருப்படியாய் பதிவிடவும் “சரக்கும்” கிடைப்பதில்லை. எங்களுக்கு ஆங்கிலம் படிப்பிடிச்ச வாத்தி அடிக்கடி “an idle mind is the devil's workshop" என்று சொல்லுவார். இதற்கு "சும்மா இருக்கும் மனமே பிசாசின் வேலைப்பட்டடை" என்று தமிழ் என நினைக்கிறன். ஆதனால் சும்மா இருந்தால் பிரச்சனையாய் போய்விடும் என்பதற்காக யூரிப்பில் சில தமிழ் குறும்படங்களை பார்க்க கிளம்பினால் சில படங்கள் சிக்கின. ஆச்சரியம் என்னவென்றால் தமிழர்கள் எந்த நாட்டில் எந்த அளவில் வாழ்ந்தாலும் அங்கிருந்து அனைத்து வகையான முயற்சிகளையும் செய்து பார்த்து விடுகின்றனர் என்பதுதான். பார்த்தவற்றில் சிலவற்றை தருகின்றேன். உங்களுக்கு இது மாதிரி தெரிஞ்சால் சொல்லுங்கோ பிசாசை கலைக்க உதவும்....

மலேசியா

மலேசியாத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட குறும்படங்கள் ஐந்தாறுக்கு மேல் யூரிப்பில் கிடக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த வெண்மை. மலேசியாவிற்கு இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தமிழர்களில் ஒரு பகுதி முன்னேறி விட , இன்னும் சிலர் அந்த தோட்டங்களிலேயே மிகக்குறைந்த சம்பளத்தில் வாழ்வது தொடர்கின்றது. அதிலும் துரதிஸ்ரம் என்னவென்றால் தமிழ்த் தோட்ட முதலாளிகள் தங்களின் அடிமை போல் தமிழர்களையே வைத்து அவர்களை பொருளாதார , பாலியல் ரீதியாக சுரண்டுவதான கதை இது.

மலேசியாவில் திரைப்பட முயற்சிகள் எந்த அளவில் இருக்கின்றன என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் இப்படியான முயற்சிகள் அவற்றை நல்ல நிலைக்கு கொண்டு சொல்லும் என நினைக்கின்றேன்.
வெண்மை


இதுவும் ஒரு மலேசியாவில் உருவாக்கப்பட்ட குறும்படம் தான். இணையப் பாவனையில் ஏற்படுகின்ற ஆண் - பெண் உறவு குறித்த கதை. சித்தப்பா என்ற இதன் பெயரை வைத்துக்கொண்டே படத்தின் பாதியிலேயே முடிவை ஊகித்து விடுவீர்கள். இது எல்லோருக்கும் பொதுவில் தட்டுப்படுகின்ற ஒரு கரு எனினும் அதை சுவாரசியமாக எடுத்திருக்கின்றார்கள். சும்மா ஜாலியாய் பார்க்கலாம் (யுவன்களும் யுவதிகளும் :)

சித்தப்பா


நான் தொலைக்கும் நான்


என் நடைபாதையில்
முன்னும் பின்னுமாய்
ஆகி
எந்த வீதியில் நான் நடக்கையிலும்
நிழலாய் இருந்தென்னை
குற்றம் கண்பதாய்
ஆரம்பிக்கிறது
உங்களின் தத்துவங்கள்.

சுளுக்குப் பிடித்துப் போன
உங்களின் கழுத்தின் பார்வைத்திசையில்,
விதிகளை வரையும் உங்கள்
கரங்களின் கதியில்,
எங்குமே...
சக்கடை சலசலத்து ஓடுவதாய்
தோன்றுகிறதெனக்கு.
அதுதான் உங்கள் சங்கீதம் எனில்
நிச்சயம் எனக்கது
நிம்மதி தருவதாய் இல்லை.

என் அடையாளங்கள்
உங்களை பிணத்திற்கலையும்
மிருகங்கள் ஆக்குகிறதெனில்

உயிரில் உள்ள இறுதி
மூச்சையெறிந்து,
நாகரிகம் பெறா..
மொழிகளறியா தேசத்தில்
போய் விழுவேன்.

அங்கே
பாதம் தொடும் சடை வளர்த்து
மரப்பீப்பாய்களில் நிறைந்திருக்கும்
மதுவை ஏந்தி
கடைவாய்களில் வழிய
முன்னிருப்பவனின் முகமதில்
உமிழ்ந்து பின்தொடரும்
பொழுதின் இரத்தம் வழிந்து
களைப்புற்று இருக்கையிலே..

மங்கல் வெளிச்சமதில்
அரைகுறையை அவிழ்ந்துப்போட்டாடும்
தடித்த உதடுகள் பொருந்திய
ஒருத்தியை
பிடித்துப் புணர்ந்து ஒரு பிள்ளை
செய்வேன்
“அம்மா” என்னும் சொல் அறியமாலே...

My Blog List