நான் தொலைக்கும் நான்


என் நடைபாதையில்
முன்னும் பின்னுமாய்
ஆகி
எந்த வீதியில் நான் நடக்கையிலும்
நிழலாய் இருந்தென்னை
குற்றம் கண்பதாய்
ஆரம்பிக்கிறது
உங்களின் தத்துவங்கள்.

சுளுக்குப் பிடித்துப் போன
உங்களின் கழுத்தின் பார்வைத்திசையில்,
விதிகளை வரையும் உங்கள்
கரங்களின் கதியில்,
எங்குமே...
சக்கடை சலசலத்து ஓடுவதாய்
தோன்றுகிறதெனக்கு.
அதுதான் உங்கள் சங்கீதம் எனில்
நிச்சயம் எனக்கது
நிம்மதி தருவதாய் இல்லை.

என் அடையாளங்கள்
உங்களை பிணத்திற்கலையும்
மிருகங்கள் ஆக்குகிறதெனில்

உயிரில் உள்ள இறுதி
மூச்சையெறிந்து,
நாகரிகம் பெறா..
மொழிகளறியா தேசத்தில்
போய் விழுவேன்.

அங்கே
பாதம் தொடும் சடை வளர்த்து
மரப்பீப்பாய்களில் நிறைந்திருக்கும்
மதுவை ஏந்தி
கடைவாய்களில் வழிய
முன்னிருப்பவனின் முகமதில்
உமிழ்ந்து பின்தொடரும்
பொழுதின் இரத்தம் வழிந்து
களைப்புற்று இருக்கையிலே..

மங்கல் வெளிச்சமதில்
அரைகுறையை அவிழ்ந்துப்போட்டாடும்
தடித்த உதடுகள் பொருந்திய
ஒருத்தியை
பிடித்துப் புணர்ந்து ஒரு பிள்ளை
செய்வேன்
“அம்மா” என்னும் சொல் அறியமாலே...

2 comments:

பஹீமாஜஹான் said...

பிசாசு.......... :)

((அங்கே
பாதம் தொடும் சடை வளர்த்து
மரப்பீப்பாய்களில் நிறைந்திருக்கும்
மதுவை ஏந்தி
கடைவாய்களில் வழிய
முன்னிருப்பவனின் முகமதில்
உமிழ்ந்து பின்தொடரும்
பொழுதின் இரத்தம் வழிந்து
களைப்புற்று இருக்கையிலே..

மங்கல் வெளிச்சமதில்
அரைகுறையை அவிழ்ந்துப்போட்டாடும்
தடித்த உதடுகள் பொருந்திய
ஒருத்தியை
பிடித்துப் புணர்ந்து ஒரு பிள்ளை
செய்வேன்
“அம்மா” என்னும் சொல் அறியமாலே... ))

உண்மையில் பிசாசுகளின் மொழியில் இதனை எழுதி இருப்பதாகப் படுகிறது.

பிசாசுகள் மட்டுமல்ல
நாங்கள் படிப்பதையும் கவனத்தில் கொள்வீர்களாக :)

said...

//உண்மையில் பிசாசுகளின் மொழியில் இதனை எழுதி இருப்பதாகப் படுகிறது.

பிசாசுகள் மட்டுமல்ல
நாங்கள் படிப்பதையும் கவனத்தில் கொள்வீர்களாக :)//

பஹீமா அக்கா, விரைவில் திருந்தி விடுகிறேனே.. :)

My Blog List